இந்நாட்களில் அதிக வெப்பமான காலநிலை நிலவுவதால், வெளிப்புற விளையாட்டுகளை
விளையாடச் சென்றால், அவர்களை அதிக தண்ணீர் குடிக்க வைக்குமாறு சுகாதாரத் துறைகள் மக்களைக் கேட்டுக்கொள்கின்றன.
அதன்மூலம், தற்போது நிலவும் கடும் வெப்பமான காலநிலையினால் ஏற்படக்கூடிய நோய்களை தடுக்க முடியும் என சிறுவர் வைத்திய நிபுணர் டொக்டர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.
“அடுத்த சில நாட்களில் சூரியன் உச்சத்தில் இருப்பதால், நம் நாட்டில் வெப்பம் அதிகரிக்கும். இதனால், கூடுதல் வியர்வை ஏற்படுகிறது. கூடுதல் வியர்வையால் நீரிழப்பு ஏற்படலாம். நாம் அதிக தண்ணீர் குடிக்காமல் உடற்பயிற்சி செய்தால், வெப்ப அதிர்ச்சி நிலைகள் மற்றும் நீரிழப்பு போன்றவற்றை எதிர்கொள்ளலாம். இதை குறைக்க இயற்கையான திரவங்களை குடிக்க வேண்டும்.
“குறிப்பாக பழச்சாறுகள், கஞ்சி வகைகள், சூப்கள், எலுமிச்சை மற்றும் ஆரஞ்சு போன்ற திரவங்களை குடிப்பது நீரிழப்பைத் தடுக்க உதவும். நீரிழப்பின் அறிகுறிகளில் தலைவலி, வாந்தி, வயிற்று வலி, மயக்கம், பசியின்மை, அதிகப்படியான தூக்கம் மற்றும் தூக்கமின்மைகூட அடங்கும். அவை தடுக்கக்கூடியவை. எனவே, நிறைய தண்ணீர் குடியுங்கள்.”
இதற்கிடையில், இப்போதெல்லாம் குழந்தைகளிடையே இன்ஃப்ளூயன்ஸா வைரஸ் நோய் அதிகமாகக் காணப்படுகிறது என்றும் அவர் கூறுகிறார்.
மூன்று அல்லது நான்கு நாட்களுக்கு காய்ச்சல் நீடித்தால், உடனடியாக மருத்துவ சிகிச்சை பெற வேண்டும் என்று மருத்துவர் சுட்டிக்காட்டுகிறார்.