2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் ஆறாவது ஆண்டு நிறைவையொட்டி, இலங்கையின் முஸ்லிம்

அமைப்புகளின் கூட்டு, நீதி, உண்மை மற்றும் ஒற்றுமைக்கான ஒரு புனிதமான நினைவு அறிக்கையை வெளியிட்டுள்ளன.

இலங்கை முஸ்லிம்களாகிய நாங்கள், சம்பவங்களால் பாதிக்கப்பட்டவர்கள், அவர்களது குடும்பங்கள் மற்றும் இந்த கொடூரமான பயங்கரவாதச் செயலால் பாதிக்கப்பட்ட அனைத்து சமூகங்களுக்கும் எங்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்” என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தாக்குதல்களையும் அவற்றை நடத்தியவர்களையும் முழுமையாக நிராகரிப்பதற்கான சமூகத்தின் நீண்டகால நிலைப்பாட்டை இந்த கூட்டு அறிக்கை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.

இந்தக் கொடூரமான தாக்குதல்களை, திட்டவட்டமாகவும் சந்தேகத்திற்கு இடமின்றியும் மீண்டும் கண்டிப்பதாக முஸ்லிம் அமைப்புக்கள் குறிப்பிட்டுள்ளன.

இந்தக் குற்றங்களைச் செய்தவர்கள் இஸ்லாத்தையோ அல்லது முஸ்லிம் சமூகத்தையோ பிரதிநிதித்துவப்படுத்துவதில்லை. அவர்களின் நடவடிக்கைகள் இஸ்லாத்தின் நம்பிக்கையின் கொள்கைகளையும் மதிப்புகளையும் முற்றிலுமாக மீறுவதாகும் என்று முஸ்லிம் அமைப்புக்கள் தெரிவித்துள்ளன.

ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக, முஸ்லிம்கள் இந்த மண்ணில் விசுவாசமான, அமைதியான, ஆர்வமுள்ள மற்றும் பங்களிக்கும் குடிமக்களாக வாழ்ந்து வருகின்றனர்.

இந்தநிலையில், குறிப்பிடத்தக்க அநீதிகள், பாகுபாடு மற்றும் அவதூறுகளை எதிர்கொண்ட போதிலும், முஸ்லிம் சமூகம், எப்போதும் பொறுமை மற்றும் அமைதியின் பாதையைத் தேர்ந்தெடுத்தது, தீவிரவாதம் அல்லது வன்முறையால் ஒருபோதும் பதிலளிக்கவில்லை.

எனினும், உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள், பயங்கரவாத செயல்கள் மட்டுமல்ல, இஸ்லாத்தை அவதூறு செய்வதற்கும், முஸ்லிம் சமூகத்தை இழிவுபடுத்துவதற்கும், ஓரங்கட்டுவதற்கும் நோக்கமாகக் கொண்ட ஒரு பரந்த சதித்திட்டத்தின் ஒரு பகுதியாகும்.

எனவே இந்த விடயத்தில் நீதி தாமதிக்கப்படுவது நீதி மறுக்கப்படுவதற்கு சமம் என்று முஸ்லிம் அமைப்புக்களின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த அறிக்கையை அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா, இலங்கை முஸ்லிம் சபை, அகில இலங்கை முஸ்லிம் இளைஞர் சம்மேளன மாநாடு மற்றும் இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியி உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட முக்கிய அமைப்புகள் வெளியிட்டுள்ளன.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி