உலகின் மிக வறிய மற்றும் மிகச் சிறிய நாடுகளுக்கு அமெரிக்கா விதிக்கும் வரிகளிலிருந்து விலக்கு
அளிக்குமாறு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிடம் ஐக்கிய நாடுகள் சபை கோரிக்கை விடுத்துள்ளது.
அதன்படி, அமெரிக்க வரி முறையிலிருந்து விலக்கு அளிக்கப்பட வேண்டிய உலகின் 28 ஏழ்மையான மற்றும் சிறிய நாடுகளை அந்த அமைப்பு அடையாளம் கண்டிருந்தது.
அந்த நாடுகள், கடுமையான பொருளாதார ஆபத்தில் இருக்கக்கூடும் என்றும் அந்த அமைப்பு கூறியுள்ளதாக, வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இருப்பினும், இந்த 28 நாடுகளின் பட்டியலில் இலங்கை சேர்க்கப்படவில்லை என்று மேலும் தெரிவிக்கப்படுகிறது.