பண்டிகைக் காலத்தில் மின்சார விநியோகத்திற்கும் தேவைக்கும் இடையிலான சமநிலையை

நிர்வகிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து இலங்கை மின்சார சபை அதன் செயல்பாடுகளின் சுருக்கத்தை வழங்கியுள்ளது.

அதன்படி, மின்சாரத்திற்கான தேவை மற்றும் செயல்பாட்டில் உள்ள புதுப்பிக்கத்தக்க எரிசக்தி விநியோகங்கள் குறித்து விரிவான ஆய்வை மேற்கொண்ட பிறகு, ஏப்ரல் விடுமுறை நாட்களில் மின்சார விநியோகத்தை நிர்வகிக்க இலங்கை மின்சார சபை முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

மின்சார உற்பத்தியும் நுகர்வும் எல்லா நேரங்களிலும் சமமாக இருக்க வேண்டும் என்று சுட்டிக்காட்டும் சபை, மின்சாரம் அதிகமாகப் பயன்படுத்தப்படாத போது மின்சார உற்பத்தியையும் குறைக்க வேண்டும் என்று சபை சுட்டிக்காட்டியுள்ளது.

ஞாயிற்றுக் கிழமைகளிலும் தேசிய விடுமுறை நாட்களிலும் கூட மின்சாரத் தேவை குறைவதால், அந்த நாட்களிலும் மின்சார விநியோகம் குறைக்கப்பட வேண்டும் என்றும் சபை சுட்டிக்காட்டியுள்ளது.

அதன்படி, ஏப்ரல் 10ஆம் திகதி முதல், நாட்டின் மின்சார தேவை மிகக் குறைந்த மட்டத்தில் உள்ளதாகவும், மேலும் 100 கிலோவாட்டிற்கு மேல் உள்ள அனைத்து கூரை சூரிய மின்கலங்களின் (சோலா பவர்) விநியோகத்தை தற்காலிகமாக துண்டிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

மேலும், குறைந்த மின்சார தேவை உள்ள நேரங்களில் நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தில் ஒரு ஜெனரேட்டரை தற்காலிகமாக நிறுத்தியதாகவும், களனிதிஸ்ஸ மின் உற்பத்தி நிலையத்தின் மின்சார உற்பத்தி நடவடிக்கைகளும் ஏப்ரல் 12 ஆம் திகதி காலை தற்காலிகமாக நிறுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி, எரிபொருளைப் பயன்படுத்தி மின்சாரம் உற்பத்தி செய்யும் எந்தவொரு மின் உற்பத்தி நிலையமும் தற்போது செயல்பாட்டில் இல்லை என்றும், நீர் மின் நிலையங்கள் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கு மட்டுமே முன்னுரிமை அளித்து மின்சார உற்பத்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் இலங்கை மின்சார சபை மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

மின்சார தேவை மேலும் குறைந்து வருவதால், ஏப்ரல் 13 அன்று கூரை சூரிய மின்கல அலகுகளின் உரிமையாளர்களுக்கு பகலில் தங்கள் சூரிய மின்கலன்களை இயக்குவதை நிறுத்துமாறு அறிவிப்பும் விடுக்கப்பட்டதாக இலங்கை மின்சார சபை சுட்டிக்காட்டியுள்ளது.

எனவே, மின்சார சபை வெளியிட்ட அறிவிப்புகளின்படி, கூரை சூரிய மின்கல அனைத்து உரிமையாளர்களும் தங்கள் அலகுகளை பிற்பகல் 3 மணி வரை மூடிவிட்டு, மின்சார தேவை இயல்பு நிலைக்குத் திரும்பும் வரை தொடர்ந்து உதவி வழங்குமாறு மின்சார சபை மேலும் கேட்டுக் கொண்டுள்ளது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி