பலஸ்தீனத்திற்கான தனிநாட்டை இலங்கை வரவேற்கின்றது. அதற்கு ஆதரவளிக்கின்றது என

இலங்கையின் பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலி தெரிவித்துள்ளார்.

இன்று பாராளுமன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

“பலஸ்தீனத்தில் இஸ்ரேல் பாரிய தாக்குதல்களை மேற்கொண்டுவருகிறது. பலஸ்தீன மக்களுக்கு எதிரான  இனப்படுகொலையாக இது கருதப்படுகிறது. "அம்னஸ்டி இன்டர்நேஷனல்"இன் தகவலின் படி பலஸ்தீனிய மக்களுக்கு எதிரான ஒரு அடாவடித்தனம் இது. இஸ்ரேலுக்கு எதிராக எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் வெளிப்படையாக இதனை ஏற்றுக்கொண்டிருக்கிறார்.

“இந்த நாடு பலஸ்தீனத்திற்கு ஆதரவை வழங்குகிறது. சிநேகபூர்வமான மனப்பான்மை கொண்டிருக்கிறது. பாலஸ்தீன மக்களுடைய உரிமைக்காக நாங்கள் எழுந்து நிற்கின்றோம். கௌரவ சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க அவர்கள் பலஸ்தீனிய இலங்கை நட்புறவு சங்கத்தின் தலைவராகவும் இருக்கிறார். எனவே இலங்கை அரசாங்கம் எப்போதும் பலஸ்தீனிய மக்களுடன் இருக்கின்றது.

“அவர்களை மிகவும் இரக்கத்துடன் நோக்குகின்றது. 2012ல் கூட பலஸ்தீன ஜனாதிபதி நன்றி தெரிவித்திருந்தார். பலஸ்தீனத்திற்கான தனிநாட்டைக் கூட இலங்கை வரவேற்கின்றது. அதற்கு ஆதரவளிக்கின்றது. எனவே நான் இறுதியாக குறிப்பிடுகிறேன். சர்வதேச மனித உரிமைகளுக்கு இலங்கை ஆதரவளிக்கிறது. அவை அங்கு நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்றும் இலங்கை கூறுகிறது எனத் தெரிவித்தார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி