கொழும்பு – இரத்தினபுரி பிரதான வீதியில் உள்ள எஹெலியகொட மின்னான பகுதியில்,
நேற்று (19) பீர் கொள்கலன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதைத் தொடர்ந்து, சில உள்ளூர்வாசிகள் அவசரமாக பீர் போத்தல்களை சேகரித்து நடந்துகொண்ட விதத்தை முன்னாள் இலங்கை கிரிக்கெட் கெப்டன் லசித் மாலிங்க விமர்சித்துள்ளார்.
மாலிங்க தனது பேஸ்புக் கணக்கில் சோகமான எமோஜியுடன் ஒரு பதிவை வெளியிட்டு, 'System Change ஆகிவிட்டதாகத் தெரிகிறது. அதற்காகக் காட்டப்படும் முயற்சியும் ஒற்றுமையும் அற்புதம் இல்லையா?' என்று குறிப்பிட்டுள்ளார்.
அந்தப் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
“மட்டற்ற மகிழ்ச்சி. 225 திருடர்களால் இந்த நாடு முற்றிலுமாக அழிக்கப்பட்டது என்று ஒரு பெரிய சத்தம் கேட்டது எனக்கு நினைவிருக்கிறது. 75 வருட சாபத்தைப் பற்றிய உரத்த கூக்குரல்கள் இன்றும் அவ்வப்போது கேட்கப்படுகின்றன. தவறான புரிதலால் இந்த அமைப்பு மாறிவிட்டதாகத் தெரிகிறது. ? அதற்காகக் காட்டப்படும் முயற்சியும் ஒற்றுமையும் அற்புதம் இல்லையா? மாற்ற முயற்சிப்போம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.