பலூன் ஒன்று தொண்டையில் சிக்கிக் கொண்டதால் சிறுவனொருவன் உயிரிழந்த
சம்பவமொன்று, காலி - நெலுவ பகுதியில் பதிவாகியுள்ளது.
11 வயது சிறுவன் ஒருவனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அந்தச் சிறுவன், தனது பெற்றோர் வீட்டில் இருந்தபோது பலூன் ஒன்றை ஊதி, அதை வெடிக்க முயன்றுள்ளான். அப்போது அதில் வாய்ப் பகுதியிலேயே வெடித்துச் சிதறியதில், அதில் ஒரு துண்டு சிறுவனின் தொண்டையில் சிக்கிக் கொண்டுள்ளது.
பின்னர் அவர் நெலுவ - மெதகம பிராந்திய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.