ஜனாதிபதி ஊடகப் பிரிவின் புதிய பணிப்பாளர் நாயகமாக பிரசன்ன பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார்.

அதற்கமைவான நியமனக் கடிதம் ஜனாதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவினால் இன்று (24) ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து அவருக்கு வழங்கி வைக்கப்பட்டது.

இவர் பேராதனை பல்கலைக்கழகத்தில் கலைமாணி பட்டத்தையும், ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் தொடர்பாடல் பட்டப்பின் டிப்ளோமாவையும் பெற்றுக்கொண்டுள்ளதோடு, களனி பல்கலைக்கழகத்தில் வெகுசன தொடர்பாடல் பட்டப்பின் படிப்புக்கான பட்டத்தையும் பெற்றுள்ளார்.

PMD_01.jpg

ஜனாதிபதி ஊடக ஆலோசகராக சந்தன சூரியபண்டாரவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவின் சர்வதேச ஊடக மற்றும் மூலோபாய தொடர்பாடல் பணிப்பாளராக அநுருத்த லொகுஹபுஆரச்சியும் நியமனம்

ஜனாதிபதி ஆலோசகராக (ஊடக) பிரபல ஊடகவியலாளர்  சந்தன சூரியபண்டார நியமிக்கப்பட்டுள்ளதோடு  ஜனாதிபதி ஊடகப் பிரிவின் சர்வதேச ஊடக மற்றும் மூலோபாய தொடர்பாடல் பணிப்பாளராக அநுருத்த லொகுஹபுஆரச்சியும் நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர்கள் இன்று (24) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவிடமிருந்து தமது நியமனக் கடிதங்களை பெற்றுக் கொண்டனர்.

PMD_02.jpg

பிரபல ஊடகவியலாளரான சந்தன சூரியபண்டார 30 வருடங்களுக்கு மேலாக இலங்கை ஊடகத்துறையில்  குறிப்பிடத்தக்க பங்காற்றி வருகிறார். ஊடகத் துறை தொடர்பிலான பரந்த அறிவுடன் கூடிய  தலைசிறந்த தகவல் தொடர்பாளராக பார்வையாளர்களின் மனங்களை வென்றுள்ள அவர் எழுத்தாளருமாவார்.

PMD03.jpg

உள்நாட்டு ஊடக புகைப்படத்துறையில் குறிப்பிடத்தக்க சேவையாற்றியுள்ள அநுருத்த லொகுஹபுஆரச்சி, சர்வதேச ரொய்டர் செய்திச் சேவையில் இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக சேவையாற்றி டிஜிடல் புகைப்படத்துறையை எமது நாட்டுக்கு அறிமுகம் செய்துள்ளார். அவர் புகைப்படப்பிடிப்பு மற்றும் டிஜிடல் புகைப்படத்துறை தொடர்பான சிறப்பு பட்டம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி