வவுனியாவில் தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் சுழற்சி முறை போராட்டமானது
3000வது நாளான இன்று, தனது மகனை தேடிவந்த தாய் ஒருவர் சுகவீனம் காரணமாக மரணமடைந்தார்.
வவுனியா – தோனிக்கல் பகுதியைச் சேர்ந்த வேலுச்சாமி மாரி (மாரி அம்மா) என்பவரே தனது 79ஆவது வயதில் மரணமடைந்துள்ளார்.
இவரின் மகனான வேலுச்சாமி சிவகுமார், 2009ம் ஆண்டு இறுதி யுத்தத்திலே காணாமல் ஆக்கப்பட்டார்.
இந்நிலையில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் முன்னெடுக்கப்பட்ட பல்வேறு போராட்டங்களில் முன்னின்று போராடியிருந்தார்.
இதேவேளை தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் சுழற்சி முறை போராட்டத்தில் தொடர்ச்சியாக இணைந்து போராடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.