மாலபே பொலிஸ் பிரிவின் ஹோகந்தர, விஸ்கம் மாவத்தை பகுதியில் பொலிஸாரின் உத்தரவை

மீறி பயணித்த மோட்டார் வாகனம் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் நேற்று (23) இரவு மாலபே பொலிஸ் அதிகாரிகள் குழு ஒன்று சோதனை நடத்திக் கொண்டிருந்தபோது, ​மோட்டார் வாகனம் ஒன்றை நிறுத்துமாறு சமிக்ஞை செய்துள்ளனர்.

இதன்போது குறித்த மோட்டார் வாகனம், திடீரென பின்னோக்கி பயணித்துள்ள நிலையில், பொலிஸ் அதிகாரி அதன் சக்கரங்களில் ஒன்றை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

பின்னர் மோட்டார் வாகனம் அருகிலுள்ள மின் கம்பத்தில் மோதி நின்றுள்ள நிலையில், பொலிஸ் அதிகாரிகள் நடத்திய சோதனையின் போது, ​​சாரதியின் இருக்கைக்கு அடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 1.800 கிலோ கிராம் கேரள கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டது.

பின்னர், போதைப்பொருட்களை கொண்டு சென்ற 30 வயது சந்தேகநபரும், 33 வயதான பெண் சந்தேகநபரும் கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் தெல்கொட பகுதியில் வசிக்கும் கணவன், மனைவி என தெரியவந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

மேலதிக விசாரணையின் போது, ​​சந்தேகநபர்கள் வசித்து வந்த வீட்டில் இருந்து சுமார் 1 கிலோ கிராம் கேரள கஞ்சா போதைப்பொருளும், அதனை அளவிட பயனப்படுத்தப்பட்டுள்ள தராசும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

மாலபே பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி