இன்று (22) அதிகாலை பேருந்து ஒன்று தீப்பிடித்து எரிந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று அதிகாலையில்

உடமலுவ பொலிஸ் பிரிவில் உள்ள சேதவனாராமய அருகில் யாத்ரீகர்கள் குழுவுடன் பயணித்த பேருந்து ஒன்று தீப்பிடித்து எரிந்துள்ளது.

இந்த பேருந்து எம்பிலிப்பிட்டிய பிரதேசத்திலிருந்து அநுராதபுரம் பிரதேசத்திற்கு யாத்ரீகர்கள் குழுவுடன் வந்து, ஓய்வு விடுதி ஒன்றில் தங்கியிருந்துள்ளனர்.

இதன்போது, அவர்கள் வந்த பேருந்தில் இவ்வாறு தீப்பிடித்துள்ளது. அந்த பேருந்தில் இருந்த ஒருவர் தீயில் சிக்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் சுமார் 55 வயதுடைய எம்பிலிப்பிட்டிய பிரதேசத்தில் வசிப்பவர் ஆவார். அநுராதபுரம் நகர சபையின் தீயணைப்பு பிரிவு, அநுராதபுரம் பொலிஸ் மற்றும் உடமலுவ பொலிஸ் இணைந்து தீயை கட்டுப்படுத்தியுள்ளனர்.

தீப்பிடித்த பேருந்து முழுமையாக எரிந்து தீக்கிரையாகியுள்ளது. உடமலுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி