பாதாள உலகக் கோஷ்டியைச் சேர்ந்த 'கணேமுல்ல சஞ்சீவ' என்று அழைக்கப்படும் சஞ்சீவ குமார

என்பவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த  துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம், கொழும்பு - புதுக்கடை நீதிமன்ற வளாகத்துக்குள் இன்று புதன்கிழமை (19) இடம்பெற்றுள்ளது.

கணேமுல்ல சஞ்சீவவை விசாரணை நடவடிக்கைகளுக்காக பூஸா சிறைச்சாலையிலிருந்து புதுக்கடை நீதிமன்றத்துக்கு அழைத்துவரப்பட்ட சந்தர்ப்பத்திலேயே, குறித்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டவர் சட்டத்தரணியின் தோற்றத்தில் வருகை தந்திருந்ததாகவும் கூறப்படுகிறது.

துப்பாக்கிச் சூட்டில் பயன்படுத்தப்பட்ட கைத்துப்பாக்கி தற்போது நீதிமன்ற வளாகத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி