இலங்கை, வடகொரியாவாக மாறுவதை தடுப்பதற்கு மக்கள் அனைவரும் குரல் கொடுக்க

வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

நாட்டில் தற்போது ஜனநாயக உரிமைகளை ஒடுக்கும் செயற்பாடுகளை அராசாங்கம் ஆரம்பித்திருக்கிறது. இந்த அரசாங்கம் ஆட்சியைப் பொறுப்பேற்றவுடன் தமது தேர்தல் பிரசார மேடைகளில் ஏறிய ஓய்வு பெற்ற பொலிஸ் உத்தியோகத்தர்களை, பொலிஸ் மற்றும் அரச பாதுகாப்பு பணிகளில் உயர் பதவிகளில் நியமித்துள்ளது.

இதற்கு முன்னர் எந்தவொரு அரச தலைவரும் இவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுத்ததில்லை. தற்போது பொலிஸ் திணைக்களம் முழுமையாக அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளது.

மறுபுறம் சட்டமா அதிபர் மீது அச்சுறுத்தல் விடுக்கப்படுகிறது. அது மாத்திரமின்றி அரசியல் கட்சிகளுக்கும் அச்சுறுத்தல் விடுக்கப்படுகிறது.

இந்நாட்டை வடகொரியாவாக்குவதற்கு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க முயற்சிக்கின்றாரா என்ற சந்தேகம் எழுகிறது.

எனவே அரசாங்கத்தின் இவ்வாறான ஜனநாயக விரோத செயற்பாடுகளுக்கு எதிராக மிகக் கடுமையாக எதிர்ப்புக்களை வெளியிட வேண்டும்.

கடந்த காலங்களில் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீது பல்வேறு அவதூறுகள் பரப்பப்பட்டன.

ஆனால் அவர் ஒருபோதும் சமூக வலைத்தளங்களை முடக்குவதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போதைய அரசாங்கம் அவ்வாறு அல்ல.

தமக்கு எதிரான கருத்துக்களை வெளியிடுவதற்கு எவருக்கும் அனுமதிப்பதில்லை. எனவே இலங்கை, வடகொரியாவாக மாறுவதை தடுப்பதற்கு மக்கள் அனைவரும் குரல் கொடுக்க வேண்டும் என்றார்.


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி