குருநாகல் – தோரயாய பகுதியில் இன்று (10) காலை, பயணிகள் பஸ்கள் இரண்டு ஒன்றுடன் ஒன்று மோதி, பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில், ஒரு பெண் உட்பட நான்கு பேர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும், விபத்தில் 28 பேர் காயமடைந்து, குருநாகல் போதனா மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கதுருவெல பகுதியிலிருந்து குருநாகல் நோக்கி பயணித்த தனியார் பஸ், தோராயாய பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த போது, மாதுரு ஓயாவிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த பஸ் ஒன்று, பின்னால் வந்து மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும், சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் அடையாளங்கள் இன்னும் காணப்படவில்லை என்றும் பொலிார் தெரிவித்தனர்.