நாடு முழுவதும் தடைப்பட்டிருந்த மின்சார விநியோகம் தற்போது வழமைக்கு திரும்பியுள்ளதாக மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
பாணந்துறை உப மின் நிலையத்தின் மின்கட்டமைப்பில் குரங்கொன்று மோதியதன் காரணமாக நாடளாவிய ரீதியில் மின் தடை ஏற்பட்டுள்ளதாக வலுசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி தெரிவித்தார்.
இந்த சம்பவம் மின் விநியோகத்தை பாதித்ததால் மின்சார விநியோகத்தில் பெரும் பாதிப்பு ஏற்பட்டதாக அமைச்சர் கூறியுள்ளார்.
எவ்வாறாயினும், அமைச்சரின் கூற்றை வலுசக்தி அமைச்சு உறுதிப்படுத்தவில்லை. மறுசீரமைப்பு முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் மின் தடைக்கான உத்தியோகப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.
பாணந்துறை உப மின் கட்டமைப்பில் ஏற்பட்ட திடீர் மின் தடை காரணமாகத்தான், நாடு முழுவதும் மின் விநியோகத் தடை ஏற்பட்டதாக மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
மின் விநியோகத்தை வழமைக்கு கொண்டுவரும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது.
பாணந்துறை உப மின் கட்டமைப்பில் ஏற்பட்ட பிரச்சினையால், தேசிய மின்சார விநியோக அமைப்பில் ஏற்பட்ட ஏற்றத்தாழ்வுடன் இணைந்து நாடு முழுவதும் மின் தடை ஏற்பட்டுள்ளது.
மின்சார விநியோகத்தை மீட்டெடுக்கும் பணியில் ஊழியர்கள் செயற்பட்டு வருவதாகவும், திடீரென ஏற்பட்ட மின்வெட்டுக்கு வருத்தம் தெரிவிப்பதாகவும் மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.