யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, தனக்கான அலுவலரின்

பாராளுமன்றக் கொடுப்பனவை முறைகேடாகப் பயன்படுத்தியுள்ளமையை வெளிப்படுத்தியுள்ளார்.

சமூக வலைத்தள காணொளி ஒன்றில் பேசிய பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, தனது செலவு விபரங்களை பட்டியலிடுகையில், தனக்கான சம்பளம் மற்றும் இதர கொடுப்பனவுகள் என்பன தனது செலவீனங்களுக்குப் போதுமானதாக இல்லை எனவும், இதன் காரணமாக தனக்கான அலுவலர்களை நியமிக்க வழங்கப்பட்டுள்ள பாராளுமன்ற சலுகையில், ஆய்வு அலுவலராக தனது உறவினர் ஒருவரை நியமித்து, அவருக்கு பாராளுமன்றத்தினால் கொடுப்பனவாக வழங்கப்படும் 56,000 ரூபாவை தனது செலவீனங்களுக்காக பெற்றுக்கொள்ளவுள்ளதாகத் தெரிவித்திருக்கிறார்.

குறித்த உறவினர், தனது செலவுகளுக்காக குறைந்த ஒரு பங்கைக் கேட்டதாகவும் அதற்குத் தான் மறுப்புத் தெரிவித்ததாகவும் குறிப்பிட்டுள்ள அதேவேளை, உறவினருக்கு வழங்கப்படும் கொடுப்பனவுகளை வைத்தே தனது செலவுகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

பாராளுமன்றக் கொடுப்பனவை முறைகேடாகப் பயன்படுத்தும் குறித்த விவகாரம் யாழ்  தேர்தல் மாவட்ட வாக்காளர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி