இலங்கை தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவரான அமரர் மாவை சேனாதிராஜாவின் வீட்டில்,

யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை பொலிஸார் விசாரணை நடத்தியுள்ளனர்.

மாவை சேனாதிராஜாவின் உடல் தகனம் செய்யப்பட்ட இடத்தில் மாவையின் இறுதி அஞ்சலியில் தடை விதிக்கப்பட்டோர் என்னும் வகையில் சில முக்கிய அரசியல்வாதிகள் உட்பட்டவர்களின் பெயர்கள் அடங்கிய பதாகை ஒன்று காட்சிப்படுத்தப்பட்டு இருந்தது. 

குறித்த பதாகையில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன், சாணக்கியன், பதில் பொதுச் செயலாளர் சத்தியலிங்கம், பதில் தலைவர் சிவஞானம் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் உள்ளிட்ட மேலும் சிலரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டிருந்தன.

அந்த பதாகையை காட்சிப்படுத்தியது யார், மற்றும் அதன் பின்னணி என்ன என்பவை தொடர்பில் மாவை சேனாதிராஜாவின் குடும்பத்தாரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பில் கருத்துத் தெரிவித்துள்ள கலையமுதன் சேனாதிராஜா, “அரசடிச் சந்தியிலும் ஒரு பதாகை கட்டப்பட்டிருந்தது. மற்றும் உடல் தகனம் செய்யப்பட்ட இடத்தில் ஒரு பதாகை கட்டப்பட்டிருந்தது. இரண்டையும் நானே எமது ஆதரவாளர்கள் ஊடாக அப்புறப்படுத்தினேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், காட்சிப்படுத்தப்பட்ட அந்த பதாகையில் மாவையின் மரணத்துக்குக் காரணமான தமிழினத்தின் தமிழரசு துரோகிகள் என்று சுட்டிக்காட்டப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி