ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களை நடத்த சதி செய்ததாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய
ராஜபக்ஷ மீது ஆசாத் மௌலானா சுமத்திய குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்துள்ள முன்னாள் ஜனாதிபதி, இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்று தெரிவித்துள்ளார்.
‘தயவு செய்து ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையைப் படியுங்கள். சிஐடி அதிகாரிகள் அளித்த சாட்சியங்கள் உட்பட, அந்த அறிக்கையில் உள்ளதைத் தவிர வேறு எதுவும் எனக்குத் தெரியாது” என்று, அவர் ஊடகமொன்றுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.