இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகம் விசா விண்ணப்பதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.
அதன்படி, அனைத்து விண்ணப்பதாரர்களும் தமது வீசா விண்ணப்பங்களை கண்காணிப்பதை இயலுமாக்குவதை உறுதிப்படுத்துவதற்கும் மற்றும் வினைத்திறனை மேம்படுத்துவதற்கும் நடைமுறையொன்று பின்பற்றப்பட்டுள்ளது.
அதன்படி, பெப்ரவரி மாதம் 8ஆம் திகதி முதல் வீசா தொடர்பான ஆவணங்களை சமர்ப்பித்தல் மற்றும் பெற்றுக்கொள்ளல் போன்ற அனைத்து நடவடிக்கைகளும் VFS கூரியர் மூலம் மேற்கொள்ளப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் பின்பு அமெரிக்கத் தூதரகத்தில் நேரடியாக ஆவணங்களைச் சமர்ப்பிக்கவோ அல்லது பெற்றுக்கொள்ளவோ முடியாது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தாமதங்களைத் தவிர்ப்பதற்காக, புதுப்பிக்கப்பட்ட நடைமுறைகளைப் பின்பற்றுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
பெப்ரவரி மாதம் 8ஆம் திகதி முதல், சிறப்பு விநியோக சேவைகள் மற்றும் கட்டண முறைகள் பற்றிய விபரங்களுக்காக இந்த இணையத்தளத்திற்குள் பிரவேசித்து பார்வையிடலாம்.