இலங்கை வரலாற்றில் அதிகளவான சுற்றுலாப் பயணிகளை உள்ளீர்த்த மாதமாக கடந்த
ஜனவரி மாதம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதன்படி, 2025ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் மொத்தமாக 252,761 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.
2018ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 238,924 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதோடு 2024ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இந்த தொகை 208,253ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது.
இலங்கை, இந்த வருடம், 300,000 சுற்றுலாப் பயணிகளின் வருகையை இலக்காகக் கொண்டுள்ளது. அத்துடன், இலங்கைக்கு வரும் பெருமளவிலான சுற்றுலாப் பயணிகள் இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.