ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க படுகொலை செய்யப்பட்ட வழக்கின் மூன்று சந்தேக நபர்களை

விடுவிப்பதற்கான சட்டமா அதிபரின் முடிவு தொடர்பில் அரசாங்கம் ஆராய்ந்து வருவதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

இதனை மூடி மறைக்கும் எண்ணம் அரசாங்கத்திற்கு இல்லை. அத்துடன் குற்றவாளிகளை விடுவிக்கும் எண்ணமும் இல்லை.

எனினும், இந்த விடயத்தை ஆய்வு செய்ய அரசாங்கத்துக்கு சிறிது நேரம் எடுக்கும் என்றும், மக்களின் ஆணையை அரசாங்கம் அவமதிக்காது என்றும் ஜயதிஸ்ஸ கூறியுள்ளார்.

சட்டமா அதிபரின் குறித்த முடிவு, குற்றவாளிகளைப் பாதுகாக்கும் முயற்சி என்று, சிவில் உரிமை ஆர்வலர்களிடமிருந்து எழுந்த கடுமையான விமர்சனங்களை தொடர்ந்தே அரசாங்கத்தின் இந்தக் கருத்துக்கள் வெளியிடப்பட்டுள்ளன.

குறித்த வழக்கின் மூன்று சந்தேக நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதில்லை என்று சட்டமா அதிபர் திணைக்களம் கூறியதைத் தொடர்ந்து இந்த சர்ச்சை எழுந்துள்ளது.

இதேவேளை, சில வழக்கு விசாரணைகளில் ஏற்படும் தாமதங்கள் சில தொழில்நுட்ப சிக்கல்கள் காரணமாகவே தவிர அரசாங்கத்தின் தலையீட்டால் அல்ல என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி