இன்று மாலை (29) கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
அநுராதபுர நீதவான் நீதிமன்றத்தால் 2 இலட்சம் ரூபாய் கொண்ட இரண்டு சரீர பிணையில் இராமநாதன் அர்ச்சுனா விடுவிக்கப்பட்டுள்ளார்.
குறித்த வழக்கு விசாரணை, பெப்ரவரி மாதம் 3ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
யாழ்ப்பாணப் பகுதியில் வைத்து விசேட பொலிஸ் குழுவால் பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இன்று கைது செய்யப்பட்டார்.
கடந்த 20ஆம் திகதி இரவு அநுராதபுரத்தின் தலாவ பகுதியில் போக்குவரத்து பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததாக, அவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
பின்னர், அநுராதபுரம் பொலிஸார் இந்த விடயம் குறித்து விசாரணைகளைத் தொடங்கி, அநுராதபுரம் நீதவான் நீதிமன்றத்திற்கு சமர்ப்பணங்களை முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.