இலங்கை தமிழரசுக் கட்சியின் முன்னாள் தலைவரான மாவை சேனாதிராஜா, தனது 82ஆவது வயதில் சற்றுமுன்னர் காலமானார்.

உடல் நலக்குறைவால் யாழ். போதனைா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று (29) இரவு 10 மணியளவில் அவர் உயிரிழந்துள்ளார்.

நேற்றையதினம் அதிகாலை குளியலைறைக்குச் செல்லும் போது கீழே தவறி விழுந்த மாவை சேனாதிராஜா வைத்தியசாலையின் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவருக்கு செயற்கை சுவாசம் வழங்கப்பட்டு வந்தது. அவர் உயிரிழக்கும் வரையில், அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வந்தார்.

அவர் கீழே விழுந்ததால் தலையில் அடிபட்டு, தலையில் நரம்பு வெடிப்பு ஏற்பட்டதாகவும் இதனால் மூளையில் ஏற்பட்ட இரத்த கசிவு காரணமாக ஆபத்தான நிலையில் செயற்கை சுவாச உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டிருந்தது.

பல அரசியல் தலைவர்கள் வைத்தியசாலைக்குச் சென்று குடும்பத்தாரிடம் நலன் விசாரித்து வந்தனர். பாராளுமன்ற உறுப்பினர் சி. சிறீதரன் நேரில் சென்று மாவையை பார்வையிட்டார். 

தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம், நிர்வாகச் செயலாளர் குலநாயகம், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பென்னம்பலம், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் ஆகியோரும் நேரில் சென்று பார்வையிட்டனர்.


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி