கிரிஷ் ஒப்பந்தம் தொடர்பாக சட்டமா அதிபர் தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகை குறித்து,
பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, தனது எக்ஸ் தளத்தில் விளக்கமொன்றை அளித்துள்ளார்.
இந்த வழக்கு, அரசாங்கத்தின் தோல்வியைக் காட்டுகிறது என்றும் விரைவில் உண்மை வெல்லும் என்றும் நாமல் ராஜபக்ஷ அதில் குறிப்பிட்டுள்ளார்.
"கிரிஷ் நிறுவனம் தொடர்பான வழக்கில் அட்டர்னி ஜெனரல் என் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளதாக ஊடகங்களில் படித்தேன்.
“இந்த விவகாரம், முதன்முதலில் நல்லாட்சி அரசாங்கத்தின் கீழ் விசாரிக்கப்பட்ட போது, 8 ஆண்டுகளுக்கு முன்பு சட்டமா அதிபரிடம் பரிந்துரைக்கப்பட்டது. கீழ் 8 ஆண்டுகளுக்குப் பிறகு, தற்போதைய அரசாங்கத்தினால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தற்போதைய அரசாங்கம், ராஜபக்ஷ குடும்பத்திற்கு எதிராக அரசியல் வேட்டையைத் தொடங்கியுள்ளது என்பது தெளிவாகிறது.
“எனக்கு நீதித்துறை மீது நம்பிக்கை உள்ளது. நீதி வெல்லும் என்று நம்புகிறேன். எங்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை புனைவதன் மூலமும், நாட்டை நிர்வகிப்பதில் அவர்கள் செய்த தோல்விகளிலிருந்து கவனத்தைத் திசை திருப்பவும், மக்கள் எதிர்கொள்ளும் கடுமையான சுமையைக் குறைக்கவும் முடியும் என்று தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நம்புவதாகத் தெரிகிறது.
‘இருப்பினும், அவர்களின் குறைபாடுகள் விரைவில் அனைவரும் காணும் வகையில் வெளிப்படும். ராஜபக்ஷர்கள் மீதான தாக்குதல்களுக்குப் பின்னால், அரசாங்கம் தனது தோல்விகளை நீண்ட காலத்திற்கு மறைக்க முடியாது. எல்லாவற்றிற்கும் மேலாக, நீதி வெல்லும் என்று நான் உறுதியாகவும் உண்மையாகவும் நம்புகிறேன்” என்று, நாமல் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.