ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு தெரிவிக்க முன்வந்த ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, சர்வஜன பலய
மற்றும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியைச் சேர்ந்த ஒரு குழு, எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலில் இணைந்து போட்டியிடத் தயாராகி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த மூன்று கட்சிகளின் பிரதிநிதிகளும், கொழும்பு டார்லி வீதியில் உள்ள ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தலைமையகத்தில் ஒன்றுகூடி, இது தொடர்பாக கலந்துரையாடல்களை நடத்தியதாக அங்குள்ள வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான நிமல் சிறிபால டீ சில்வா, மஹிந்த அமரவீர, அநுர பிரியதர்ஷன யாப்பா, துமிந்த திசாநாயக்க, லசந்த அழகியவண்ண ஆகியோரும், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவிலிருந்து வெளியேறிய குழுவின் சார்பாக பிரமித்த பண்டார தென்னகோன் மற்றும் ஒரு குழுவினரும் கலந்து கொண்டனர். மற்றும் சர்வஜன பலய சார்பாக பேராசிரியர் சன்னா ஜெயசுமனவும் கலந்துகொண்டிருந்தார் என்று கூறப்படுகிறது.
உள்ளூராட்சிமன்றத் தேர்தல்கள், தற்போதைய அரசியல் நிலவரம் உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து, அங்கு விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது.
இந்தப் பிரதிநிதிகள், இதற்கு முன்னர் பல சந்தர்ப்பங்களில் இந்த விடயத்தில் விவாதங்களை நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.