பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, சற்றுமுன்னர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அநுராதபுரத்தில் பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டின் கீழ் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
யாழ்ப்பாணப் பகுதியில் பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனை, சிறப்புப் பொலிஸ் குழு கைது செய்துள்ளது.
சந்தேகநபரான பாராளுமன்ற உறுப்பினரை, அநுராதபுரம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்தார்.
ஜனவரி 20, 2025 அன்று இரவு, அநுராதபுரத்தின் தலாவ பகுதியில் போக்குவரத்து பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுத்து, அவர்களின் கடமைக்கு இடையூறு விளைவித்தார் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே, அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த விவகாரம் குறித்து அநுராதபுரம் பொலிஸார் விசாரணைகளைத் தொடங்கி, அநுராதபுரம் நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளனர்.