ஜப்பானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் 27 இருக்கைகள் கொண்ட பஸ்ஸை, உள்நாட்டில்

2.5 மில்லியன் (இரண்டரை கோடி) ரூபாய்க்கே விற்பனை செய்யவேண்டி ஏற்படும் என்றும் ஜப்பான் லொறிகளின் விலையும் தற்போது அதிகரித்துள்ளதென்றும் வாகன இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

போக்குவரத்து வாகனங்களை இறக்குமதி செய்வது தொடர்பான விதிமுறைகள் அடங்கிய வர்த்தமானியை அரசாங்கம் வெளியிட்டுள்ள போதிலும், வாகன இறக்குமதிக்கான வரிகள் தொடர்பான வர்த்தமானி அறிவிப்புகள் வெளியிடப்படாததால், வாகனங்களை இறக்குமதி செய்வது இன்னும் சாத்தியமில்லை என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்த அரசாங்கத்தின் அமைச்சரவை ஊடகப் பேச்சாளரும் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சருமான டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ, வாகன விலைகளில் சிறிதளவு அதிகரிப்பு இருக்கும் என்று தெரிவித்தார்.

வாகனங்கள் மீதான வரிகள் தொடர்பாக ஏதேனும் சிக்கல்கள் இருந்தால், வாகன இறக்குமதியாளர்கள் நிதிப் பிரதியமைச்சருடன் இது குறித்து விவாதிக்க வாய்ப்பு இருப்பதாகவும் அமைச்சர் கூறினார்.

தனியார் வாகனங்களை இறக்குமதி செய்வது நாட்டின் டொலர் கையிருப்பில் ஏற்படுத்தக்கூடிய தாக்கத்தை அரசாங்கம் ஆய்வு செய்து வருவதாகவும் கூறிய அமைச்சர், மோட்டார் சைக்கிள்களை இறக்குமதி செய்வது குறித்து இன்னும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றும் கூறினார்.

இதேவேளை, வாகன இறக்குமதிக்கு தடை விதித்து வெளியிடப்பட்டிருந்த வர்த்தமானியை இரத்து செய்து வாகன இறக்குமதிக்கு அனுமதி வழங்க நிதி அமைச்சு வர்த்தமானியொன்றை நேற்று வெளியிட்டிருந்தது.

குறித்த வர்த்தமானி தகவல்களின் படி 04 வகையான வாகனங்களுக்கு மட்டுமே இறக்குமதி அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக வாகன இறக்குமதியாளர்கள் சங்கத் தலைவர் பிரசாத் மனகே தெரிவித்துள்ளார்.

குறிப்பாக பொதுப் போக்குவரத்துக்கான பஸ்கள், 10 – 16 சீட் கொண்ட வேன்கள், லொறி, டபல் கெப் ரக வாகனங்களை இறக்குமதி செய்ய மட்டுமே குறித்த வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக தனிப்பாவனைக்கான வாகனங்கள் இறக்குமதிக்கு இதுவரை அனுமதி வழங்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

அத்தோடு மேலே உள்ள வாகன இறக்குமதிக்கு அமைவாக வரி அறவீடு குறித்த எந்த தகவல்களும் இல்லை என்றும் அதனையும் அரசு விரைவில் வழங்க வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி