அமெரிக்கா சென்றுள்ள முன்னாள் அமைச்சர் பெசில் ராஜபக்ஷ, எதிர்வரும் மே மாதம் நாடு
திரும்புவார் என்று, மஹிந்த ராஜபக்ஷ குடும்ப உறுப்பினரான உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் நாட்டைவிட்டு வெளியேறிய பெசில் ராஜபக்ஷ, மீண்டும் எப்போது நாடு திரும்புவார் என எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
“ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியை, பெசில் ராஜபக்ஷ நினைத்தால், நிச்சயம் மீண்டெழ வைக்க முடியும். எனினும், அவர் அரசியலில் இருந்து ஓதுங்கிவிட்டார். பெசில் ராஜபக்ஷ மீண்டும் அரசியலுக்கு வருவதை, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவும் விரும்பவில்லை.
“மஹிந்த ராஜபக்ஷ மீது அநுரகுமார திஸாநாயக்க மதிப்பு வைத்துள்ளார். எனவே, மஹிந்தவை வீட்டைவிட்டு அவர் அனுப்பமாட்டார். அப்படி அனுப்பினாலும், பொருத்தமான வீடொன்று வழங்கப்படும்” என்று, உதயங்க மேலும் கூறியுள்ளார்.