பருத்தித்துறை அருகே கடலில் வைத்து, இந்திய மீனவர்கள் மீது கடற்படையினர்

துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவத்துக்கு, இந்திய அரசாங்கம் இலங்கை மீது கடும் அதிருப்தியை தெரிவித்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக இந்திய அரசாங்கம் புது தில்லியில் உள்ள இலங்கையின் பதில் உயர் ஸ்தானிகரை இந்திய வெளியுறவு அமைச்சகத்திற்கு வரவழைத்து எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதன்போது, வாழ்வாதாரப் பிரச்சினைகளைக் கருத்தில் கொண்டு, மீனவர்களின் பிரச்சினைகளை மனிதாபிமான முறையில் பரிசீலிக்க வேண்டியதன் அவசியத்தை இந்திய அரசு வலியுறுத்தியுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

எந்தவொரு சூழ்நிலையிலும் பலத்தைப் பயன்படுத்துவது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும், இது தொடர்பாக இரு அரசாங்கங்களுக்கு இடையேயான புரிதல்கள் கண்டிப்பாகக் கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்றும் இந்திய வெளியுறவு அமைச்சகம் கூறுகிறது.

யாழ்ப்பாணம் - பருத்தித்துறை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்த இந்திய மீனவர்களை கைது செய்யும் போது இலங்கை கடற்படையினர் நடத்திய துப்பாக்கி பிரயோகத்தில் இருவர் காயமடைந்தனர்.

காயமடைந்த இருவரும் இன்று அதிகாலை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பருத்தித்துறை கடற்பரப்பில் 13 இந்திய மீனவர்களுடன் படகொன்று அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்டது.

இந்திய மீனவர்களின் படகில் ஏறி அவர்களை கைது செய்ய கடற்படை வீரர் முயற்சித்துள்ளார். இதன்போது கடற்படை வீரரை ஏற்றிக்கொண்டு மீனவர்களின் படகு தப்பிச்செல்ல முற்பட்டுள்ளது.

இதனையடுத்து ரோந்து படகில் சென்ற இலங்கை கடற்படையினர் நடத்திய துப்பாக்கி பிரயோகத்தில் இந்திய மீனவர்கள் இருவர் காயமடைந்தனர்.

கைதான இந்திய மீனவர்களை கடற்றொழில் நீரியல் வள திணைக்களம் பொறுப்பேற்க மறுத்துள்ள நிலையில், பருத்தித்துறை பொலிஸாரிடம் இந்திய மீனவர்கள் ஒப்படைக்கப்பட்டனர்.

காயமடைந்த இந்திய மீனவர்களை யாழ்ப்பாண இந்திய துணைத்தூதுவர் சாய்முரளி பார்வையிட்டுள்ளார். குறித்த மீனவர்களை நாட்டிற்கு அனுப்புவதற்கான  நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி