சிறுவர்கள் மீதான கடுமையான பாலியல் துஷ்பிரயோக சம்பவங்கள் தொடர்பாக 2024ஆம்

ஆண்டில் 321 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேசிய சிறுவர்கள் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.

2024 ஜனவரி 1 முதல் டிசம்பர் 31 வரை பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் தொடர்பாக 580 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த காலகட்டத்தில், சிறுவர்கள் தொடர்பாக மொத்தம் 8,746 முறைப்பாடுகள் தேசிய சிறுவர்கள் பாதுகாப்பு அதிகார சபைக்கு கிடைத்துள்ளன.

இதில் அதிக எண்ணிக்கையிலான முறைப்பாடுகளாக 2,746 முறைப்பாடுகள் சிறுவர் பாதுகாப்பு தொடர்பாக  கிடைக்கப்பெற்றுள்ளது.

சிறுவர்கள் மீதான சித்திரவதை தொடர்பாக 1,950 முறைப்பாடுகளும், சிறுவர்கள் யாசகம் பெறுவது  தொடர்பாக 229 முறைப்பாடுகளும் கிடைத்துள்ளன.

பாலியல் வன்கொடுமை தொடர்பாக 42 முறைப்பாடுகளும், பாலியல் செயல்களுக்கு சிறுவர்களை தூண்டுவது தொடர்பாக 25 முறைப்பாடுகளும் கிடைத்துள்ளது.

இதற்கிடையில், கடந்த ஆண்டில் குழந்தை திருமணங்கள் தொடர்பாக 14 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன, மேலும் நிர்வாண புகைப்படங்களை இணையத்தளத்தில் வெளியிடுவதாக மிரட்டல்கள் தொடர்பாக 151 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

2024ஆம் ஆண்டில் தற்கொலை முயற்சி தொடர்பாக 18 முறைப்பாடுகளும், போதைப்பொருள் பழக்கம் தொடர்பாக 120 முறைப்பாடுகளும் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு வயது குறைந்த கர்ப்பங்கள் தொடர்பாக 53 முறைப்பாடுகளும், பிறப்புச் சான்றிதழ் இல்லாத சிறுவர்கள் தொடர்பாக 39 முறைப்பாடுகளும் கிடைத்துள்ளதாக தேசிய சிறுவர்கள் பாதுகாப்பு அதிகார சபை மேலும் தெரிவித்துள்ளது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி