இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட 1,485 மெட்ரிக் தொன் உப்பு அடங்கிய கப்பல்,
நாட்டை வந்தடைந்துள்ளதென்று, அரச வர்த்தகக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
நாட்டில் தற்போது நிலவும் உப்பு பற்றாக்குறைக்கு தீர்வாக, 30,000 மெட்ரிக் தொன் உப்பை இறக்குமதி செய்ய அமைச்சரவை சமீபத்தில் ஒப்புதல் அளித்தது.
அதன்படி, பெப்ரவரி 28ஆம் திகதி வரை இந்தியாவில் இருந்து உப்பு இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.