காற்றாலை மின் திட்டம் தொடர்பாக அதானி குழுமத்துடனான ஒப்பந்தத்தை இரத்து

செய்ய அமைச்சரவை எந்த முடிவும் எடுக்கவில்லை என்று அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

இருப்பினும், குறித்த திட்டத்தால் சமர்ப்பிக்கப்பட்ட மின்சார கட்டணங்களை மட்டுமே மறுஆய்வு செய்ய அமைச்சரவை முடிவு செய்துள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனால், திட்டம் இரத்து செய்யப்பட்டதாக அர்த்தமல்ல என்று அமைச்சர் கூறினார்.

இன்று நடைபெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும், இந்தத் திட்டம் தொடர்பாக தற்போது நீதிமன்றங்களில் பல வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும், அந்த வழக்குகளில் எடுக்கப்படும் தீர்மானங்கள் குறித்தும் தாம் கவனம் செலுத்தி வருவதாகவும் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ மேலும் தெரிவித்தார்.


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி