முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது மகன் யோஷித ராஜபக்ஷ,
இன்று (25) காலை குற்றப் புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்டமை தொடர்பான மேலதிக விபரங்கள் தற்போது வெளியாகியுள்ளன.
இரத்மலானை, சிறிமல் பிளேஸில் ரூ. 34 மில்லியன் மதிப்புள்ள வீடு மற்றும் நிலத்தைக் கொள்வனவு செய்தமை தொடர்பில் யோஷித ராஜபக்ஷவை சந்தேகநபராகப் பெயரிடப் போதுமான ஆதாரங்கள் இருப்பதாக, கடந்த 23ஆம் திகதியன்று சட்டமா அதிபரால் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்தே, இந்தக் கைது மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தற்போது சட்ட வழக்காக இருக்கும் இந்த நிலத் தகராறில் முக்கிய சந்தேகநபராக, யோஷித ராஜபக்ஷவின் பாட்டியான டெய்சி ஃபோரஸ்ட் என்ற பெண்ணே அடையாளம் காணப்பட்டுள்ளார்.
பணமோசடி சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட யோஷித ராஜபக்ஷ, வாக்குமூலம் பதிவு செய்த பின்னர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் பெலியத்த நுழைவாயிலுக்கு அருகில் குற்றப் புலனாய்வுத் துறையினரால் அவர் கைது செய்யப்பட்டார்.