2024ஆம் ஆண்டுக்கான ஐந்தாம் தர புலமைப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பான

மேன்முறையீடுகளை இணையவழி ஊடாக சமர்ப்பிக்குமாறு பரீட்சைகள் திணைக்களம் கோரியுள்ளது.

அதன்படி, எதிர்வரும் 27ஆம் திகதி முதல் பெப்ரவரி மாதம் 6ஆம் திகதி வரை இதற்கான காலம் ஒதுக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

2024ஆம் ஆண்டுக்கான ஐந்தாம் தர பரீட்சையின் பெறுபேறுகள் நேற்று வெளியாகின.

புலமைப் பரிசிலை பெற்றுக் கொள்வதற்காக விண்ணப்பிக்க கூடியவர்கள் 20,000 என்பதுடன், விசேட தேவையுடைய 250 விண்ணப்பதாரிகள் ஏலவே தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

பாடசாலை அதிபர்களுக்கு வழங்கப்பட்டுள்ள, பயனர் பெயர் மற்றும் கடவுச் சொல் என்பவற்றைக் கொண்டு, பாடசாலை பரீட்சை பெறுபேறு ஆவணத்தை தரவிறக்கம் செய்துக் கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, 5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்கான மாவட்ட ரீதியான வெட்டுப்புள்ளி விபரங்கள் வெளியாகியுள்ளன.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி