அரசாங்கத்தின் திட்டத்தின்படி இயங்காத அரிசி ஆலைகளுக்கு இராணுவம் அனுப்பப்படும் என்று,
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க கூறுகிறார்.
நேற்று (21) இரவு சிரச தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சிறப்பு அரசியல் நிகழ்ச்சியில் பங்கேற்றபோது, ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.
வெளிநாடுகளில் உள்ள 65 சக்திவாய்ந்த குற்றவாளிகளை மீண்டும் அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அறிவித்தார்.
குற்றங்களைத் தடுக்கும் நடவடிக்கையாக சிறைச்சாலைகளுக்கு வெளியே பாதுகாப்பை வழங்குவதற்காக பொலிஸ் விசேட அதிரடிப்படையினரை ஈடுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார்.
இவ்வாறு நியமிக்கப்படும் பொலிஸ் விசேட அதிரடிப்படை உறுப்பினர்கள், ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கும் சுழற்சி முறையில் பணியமர்த்தப்படுவார்கள் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.