இலங்கை இராணுவத்தில், கூலிக்கு கொலை செய்யும் பாதாள உலகக் கொலையாளிகள்

குழுவைச் சேர்ந்தவர்களும் காணப்படுவதாக, இந்நாட்டு முப்படைகளின் தலைமைத் தளபதியாக இருக்கும் ஜனாதிபதி வெளிப்படுத்தியுள்ளார்.

கிளி போலா வெளிப்படுவதற்கு மூன்று நாட்களுக்கு முன்பு, மன்னாரில் நடந்த இரட்டைக் கொலையின் முக்கிய சந்தேகநபர், பணியில் உள்ள ஒரு சிப்பாயாக அறிவிக்கப்பட்டார்.

அவருக்கு உதவிய மற்றும் உடந்தையாக இருந்த முக்கிய சந்தேகநபர், ஓய்வுபெற்ற இராணுவ உறுப்பினர் ஆவார். அவர், 2023இல் நடந்த இரட்டைக் கொலையிலும் பிரதான சந்தேகநபராவார்.

தனது தேர்தல் வெற்றியைக் கொண்டாடும் ஒரு பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, இலங்கையை 'குற்றவியல் நாடு' என்று அழைத்தவர், நாட்டில் நிலவும் மோசமான சூழ்நிலையை நாட்டின் மக்களுக்கு விளக்கினார். இராணுவத்திற்குச் சொந்தமான 73 தானியங்கி ஆயுதங்கள், பாதாள உலகத்தின் கைகளில் இருப்பதாகவும் அவர்களுக்குத் தெரிவித்தார்.

அந்த ஆயுதங்களில் கிட்டத்தட்ட பாதியளவு, பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி