அரிசியை மீண்டும் இறக்குமதி செய்வது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை
என்று, வர்த்தகம், வணிகம், உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு அமைச்சு தெரிவித்துள்ளது.
பெரும்போக அறுவடை தொடங்குவதோடு, நாட்டில் அரிசி பற்றாக்குறை முடிவுக்கு வரும் என்று பிரதியமைச்சர் ஆர்.எம்.ஜயவர்தன தெரிவித்தார்.
பல மாவட்டங்களில் நெல் அறுவடை ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய பிரதியமைச்சர், இந்நிலையில், அரிசி ஆலைகள் வைத்திருக்கும் நெல் கையிருப்புகளை சந்தைக்கு வெளியிட வணிகர்கள் நடவடிக்கை எடுத்து வருவதாக கூறினார்.
அரிசி இறக்குமதியை நாடுவதால், விவசாயிகள் கடுமையான நெருக்கடியை எதிர்கொள்வதாகவும் பெரும்போகத்தில் எதிர்பார்க்கப்படும் நெல் அறுவடை, 2.5 மில்லியன் மெட்ரிக் தொன் என்றும் அவர் தெரிவித்தார்.