18 மாவட்டங்களை பாதித்த சீரற்ற வானிலை காரணமாக கிட்டத்தட்ட 20,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக,
அனர்த்த முகாமைத்துவ மையம் தெரிவித்துள்ளது.
அனர்த்த முகாமைத்துவ மையத்தில் இன்று (21) பிற்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்த பாதுகாப்பு பிரதி அமைச்சர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர, 5,821 குடும்பங்களைச் சேர்ந்த 19,032 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பேரிடர் நிலைமை காரணமாக, பதுளை மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களில் இருந்து இரண்டு இறப்புகள் பதிவாகியுள்ளதாகவும் கூறினார்.
தற்போதைய அனர்த்த நிலைமையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க 30 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த பிரதி அமைச்சர் பேரிடர் காரணமாக இறந்த ஒருவருக்கு வழங்கப்படும் இழப்பீடுட்டுத் தொகை அதிகரிக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.
அதன்படி, 250,000 ரூபாயாக இருந்த தொகையை 1 மில்லியனாக அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக, பாதுகாப்பு பிரதி அமைச்சர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர மேலும் தெரிவித்தார்.