கஹடகொல்ல பகுதியில் ஏற்படும் ஆபத்து காரணமாக, மறு அறிவிப்பு வரும் வரை,

நாட்டின் பிரசித்தி பெற்ற 18 வளைவுகள் கொண்ட கண்டி - மஹியங்கனை வீதியை, இரவில் மட்டும் மூட முடிவு செய்யப்பட்டுள்ளது.

மறு அறிவித்தல் வரை நாளாந்தம் மாலை 6.00 மணிமுதல் மறுநாள் அதிகாலை 6.00 மணிவரை இந்த வீதி மூடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சீரற்ற வானிலை காரணமாக கண்டி - மஹியங்கனை வீதியின் கஹடகொல்லவுக்க அருகிலுள்ள 18 வளைவுப் பகுதியில் பாறைகள் இடிந்து விழும் அபாயம் இருப்பதன் காரணமாக இவ்வாறு மூடப்படுவதாக கண்டி மாவட்ட செயலாளர் தெரிவித்துள்ளார்.

அதன்படி, தொடர்ந்து தெரிவித்த மாவட்ட செயலாளர், கஹட்டகொல்ல பகுதியில் உள்ள பிரதான வீதியில் தற்போது பாறைகள் வீழ்ந்துள்ளதாக தெரிவித்தார்.

மேலும் பாறைகள் விழும் அபாயம் இருப்பதால், வீதியை தற்காலிகமாக மூட நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆபத்தான பாறைகள் அகற்றப்பட்ட பிறகு வீதியை மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இருப்பினும், பகல் வேளைகளில் கூட வீதியில் பாறைகள் விழுவதற்கான அபாயம் காணப்படுவதால், பகலில் இந்த வீதியைப் பயன்படுத்தும் சாரதிகள் மிகவும் அவதானமாக செயற்படவும்" என்றார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி