நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழீழ விடுதலைப் புலிகள்

இயக்கத்தின் தலைவர் பிரபாகரனுடன் இணைந்து நிற்பது போன்ற புகைப்படம், தான் எடிட் செய்தது என்று திரைப்பட இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில், இந்த கருத்து குறித்த விவாதம் சமூக வலைதளங்களில் எழுந்துள்ளது.

சீமானுக்கு நெருக்கமான நண்பர் ஒருவர், தான் ஒரு செய்தித் தொலைக்காட்சியில் பணிபுரிந்து கொண்டிருந்த போது, தன்னிடம் புகைப்படங்களை கொடுத்து எடிட் செய்யுமாறு கேட்டுக்கொண்டதாக சங்ககிரி ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.

சீமான் பிரபாகரனை நேரில் சந்தித்தாரா இல்லையா, சந்தித்த போது புகைப்படம் எடுத்தாரா இல்லையா என்று தனக்கு தெரியாது என்று கூறும் சங்ககிரி ராஜ்குமார், இந்த புகைப்படம் பிரபாகரனுடனான சந்திப்பின் போது எடுக்கப்பட்டதாக கூறுவது பொய் என்று கூறுகிறார்.

சீமான் மீதும் பிரபாகரன் மீதும் கொண்ட மரியாதை காரணமாகவும், இந்த புகைப்படம் சீமானுக்கு தமிழக அரசியலில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்த உதவட்டும் என்று நினைத்தும், தான் எடிட் செய்த விசயத்தை இதுவரை வெளியில் சொல்லவில்லை என்று சங்ககிரி ராஜ்குமார் கூறுகிறார்.

மேலும், பெரியார் மீதான அவதூறு பேச்சு உட்பட சமீப காலமாக சீமானின் கருத்துகள் தனக்கு உடன்பாடாக இல்லாததால், பொது சமூகத்தின் நலன் கருதி இந்த உண்மையை இப்போது கூறும் கட்டாயத்தில் இருப்பதாக அவர் கூறுகிறார்.

இது குறித்து ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில், "அந்த புகைப்படத்தை அவர் சீமானுக்கு பரிசளிக்கப் போவதாக கூறி செங்கோட்டையன் என்ற நண்பர் அந்த புகைப்படத்தை எடிட் செய்ய சொல்லி கேட்டுக் கொண்டார். பிறகு, அந்த புகைப்படமே சந்திப்புக்கான ஆதாரமாக ஊடகங்களில் பகிரப்பட்டன'' என கூறுகிறார் சங்ககிரி ராஜ்குமார்,

''இன்றைய தலைமுறைக்கு பிரபாகரன் என்றால் சீமானுக்கு ஆமைக்கறி சமைத்துக் கொடுத்தவர் என்று நினைவுக் கொள்ளும்படி செய்துள்ளார் சீமான். சமீப காலமாக, தமிழர்களுக்காக குரல் கொடுத்த பெரியாரை பற்றி அவதூறாக பேசி வருகிறார். இனிமேலும் இதை சொல்லாமல் இருக்க முடியாது என்ற கட்டாயத்தினால் இதை சொல்கிறேன்" என்றார் அவர். இதை நாம் தமிழர் கட்சியினர் தொடர்ந்து மறுத்து வருகின்றனர்.

அக்கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் சாட்டை துரைமுருகன் தனது எக்ஸ் பக்கத்தில், ''டைம் ட்ராவல் செய்து 2009-ம் ஆண்டிலேயே ஏ.ஐ தொழில்நுட்பத்தை கற்றுக் கொண்டு புகைப்படத்தை எடிட் செய்திருப்பார் போல'' என்று பதிவிட்டிருந்தார்.

சீமான் பிரபாகரனை சந்தித்தது உண்மையா இல்லையா என்பது குறித்து அவ்வபோது தமிழக அரசியல் களத்தில் விவாதங்கள் எழுந்துள்ளன.

2018ஆம் ஆண்டு மதுரையில் பேசியிருந்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, பிரபாகரனோடு சீமான் புகைப்படம் எடுக்கவில்லையென்றும் கிராபிக்ஸில் அதுபோல புகைப்படம் உருவாக்கப்பட்டதாகவும் குற்றம்சாட்டியிருந்தார்.

இது போன்ற குற்றச்சாட்டுகள் எழுந்த போது, ஏழு ஆண்டுகளுக்கு முன் செய்தி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், "என்ன நடந்தது என்று யாருக்கு தெரியும்? சந்தித்தது நானும் அவரும். மூன்று கி.மீ.க்கு இருட்டுக்குள் ஓடுகிறது வண்டி. கூட்டிட்டு வந்த போராளிகள் இறங்கி விட்டனர், அண்ணன் நடேசன்தான் வாகனம் ஓட்டுகிறார். மூன்று கி.மீக்கு மின்சாரமே கிடையாது. அடர்ந்த காட்டுக்குள் சந்திக்கிறோம். அருகில் யாருமே கிடையாது" என்றார்

சங்ககிரி ராஜ்குமார் கூறுவதை நாம் தமிழர் கட்சியின் தலைமை நிலையச் செயலாளர் கு.செந்தில் குமார் மறுக்கிறார்.

அவர் பிபிசி தமிழிடம் பேசுகையில், " விடுதலை புலிகள் இந்தியாவில் தடை செய்யப்பட்ட அமைப்பு. அப்படிப்பட்ட அமைப்பின் தலைவரோடு சந்தித்ததாக பொய் கூற வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை" என்றார்.

மேலும், "இது 17 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான புகைப்படம். சங்ககிரி என்பவர் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த புகைப்படத்தை எடிட் செய்திருப்பதாக கூறினால், அவர் மீது தான் வழக்கு தொடர வேண்டும்" என்றார்.

"சில கட்சிகள் மாவீரன் தினத்தை ஒரு சடங்காக மட்டுமே நடத்தி வந்தனர். அதனை வெகுஜன மக்களிடம் கொண்டு சேர்ந்தது நாங்கள்தான். பிரபாகரன் மீது இங்குள்ள மக்கள் சிலருக்கு ஈர்ப்பும் மரியாதையும் உண்டு. அந்த மக்களின் ஆதரவை தாங்கள் பெற வேண்டும் என்பதற்காகவே எங்கள் கட்சிக்கு எதிராக அவதூறு பரப்பி வருகிறார்கள்" என்கிறார்.

- பிபிசி


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி