யாழ் கலாச்சார மையத்தை திருவள்ளுவர் கலாச்சார மையமாக பெயர் மாற்றம்

செய்தமை குற்றம் அல்ல ஆனால் பொயர் மாற்றம் தொடர்பில் புத்திஜீவிகளின் கருத்து பெறப்பட்டிருந்தால் ஆரோக்கியமாக இருந்திருக்கும் என  தேசிய மக்கள் சக்தியின் கடற்தொழில் அமைச்சரும் யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு தலைவருமான இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்தார்.

இன்று திங்கட்கிழமை யாழ் பலாலி வீதி கந்தர் மடப்பகுதியில் தேசிய மக்கள் சக்தியின் மக்கள் தொடர்பாடல் காரியாலயத்தை திறந்து வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்திய அரசின் நிதி பங்காளிப்புடன் திறந்து வைக்கப்பட்ட யாழ் கலாச்சார மையத்திற்கு திருவள்ளுவர் கலாச்சாரம் மையம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது

குறித்த நிகழ்வில் நானும் அதிதியாக கலந்து கொண்டவன் என்ற வகையில் பெயர் மாற்றம் தொடர்பில் திரை நீக்கத்தின் போது தான் அவதானித்தேன்.

திருவள்ளுவர் கலாச்சார மையம் எனப் பெயர் மாற்றியது குற்றம் அல்ல யாழ்ப்பாணத்திற்கே உரித்தான பெயர்களான யாழ். கலாச்சார மையம் அல்லது யாழ் பண்பாட்டு மையம் என்ற பெயர் சூட்டியிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் என்பது எனது தனிப்பட்ட கருத்து.

பெயர் சூட்டம் நிகழ்வில் திருவள்ளுவர் கலாச்சார மையம் என காட்சிப்படுத்தப்பட்ட இலத்திரனியல்  திரையில் தமிழுக்கு மூன்றாவது இடம் வழங்கப்பட்டமை கவலை தரும்  விடயமும்.

தமிழ் மக்கள் வாழும் பகுதியில் தமிழுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் சில வேளை தெரியாமல் சில தவறுகள் இடம் பெற்று இருக்கக்கூடும்.

குறித்த விடயம் தொடர்பில் சம்பந்தப்பட்டவர்களுடன் நான் இன்னும் கலந்துரையாடவில்லை நிச்சயமா அது தொடர்பில் கலந்துரையாடி இனிவரும் காலங்களில் தவறுகள் இடம்பெறா வண்ணம் செயற்பாடுகளை முன்னெடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி