கொழும்பின் புறநகர் பகுதியான பண்ணிப்பிட்டிய தர்மபால வித்தியாலயத்தில்

ஸ்தாபிக்கப்பட்டுள்ள க.பொ.த உயர்தர விடைத்தாள் மதிப்பீட்டு மையத்தில் நேற்றைய தினம் குழப்பநிலை ஏற்பட்டுள்ளது.

விடைத்தாள்களை மதிப்பிடுவதற்காக கவுன் அணிந்து வந்த ஆசிரியைகளை திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நேற்று பாடசாலை நாள் என்பதால், சாறி அணிந்து வரவேண்டிய நிலையில் அவர்கள் கவுன் அணிந்து வந்ததால், பாடசாலை அதிபர் அவர்களை பாடசாலைக்குள் நுழைய அனுமதி மறுத்துள்ளார்.

மதிப்பீட்டு மையத்தின் கட்டுப்பாட்டில் பரீட்சை ஆணையம் இருப்பதால், இதில் அதிபருக்கு எந்தப் பொறுப்பும் இல்லை என விடைத்தாள்களை மதிப்பீடு செய்ய வந்த ஆசிரியர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பாடசாலைக்கென ஒழுக்கம் இருப்பதாகவும், பாடசாலைக்கு வரும் அனைவரும் அதைப் பின்பற்ற வேண்டும் எனவும் அதிபர் குறிப்பிட்டுள்ளார்.

இரு குழுக்களுக்கும் இடையே சில வாக்குவாதங்கள் ஏற்பட்டுள்ளன. அதைக் கட்டுப்படுத்த பொலிஸார் அழைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இருப்பினும், இரு தரப்பினரும் ஒரு உடன்பாட்டை எட்ட முடியாததால், பரீட்சை ஆணையாளர் நாயகம் மையத்தை தற்காலிகமாக மூடுமாறு அறிவுறுத்தியுள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக இன்று கலந்துரையாடல்களின் பின்னர்   முடிவு எடுக்கப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜெயசுந்தர தெரிவித்துள்ளார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி