இன்று, தமிழர் திருநாளாம் தைப்பொங்கல். உலகம் முழுவதிலுமுள்ள தமிழ் மக்கள்,

பொங்கல் பொங்கி, சூரிய பகவானை வழிபட்டு, தைப்பொங்கலை வரவேற்றுள்ளனர். இந்நிலையில், உலகத் தமிழர்கள் அனைவருக்கும், தமிழ் லீடர் சார்பில் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

இதேசமயம், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவும், தைப்பொங்கலையொட்டி தனது வாழ்த்தைத் தெரிவித்துள்ளார்.

அவரது வாழ்த்துச் செய்தி வருமாறு,

"அறுவடைத் திருநாள்" என்று பொருள்படும் தைப்பொங்கல், உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் மற்றும் இந்துக்களால் மிகுந்த பக்தியுடன் கொண்டாடப்படுகிறது. நிறைவான அறுவடைக்கு பங்களித்த சூரியன், பூமி, மழை மற்றும் பசுக்கள், உபகரணங்களுக்கு நன்றி செலுத்துவது இந்த நாளின் சிறப்பம்சமாகும். இந்த விழா ‘தை’மாதத்தின் முதல் நாளில் கொண்டாடப்படுகிறது. சூரியனின் வடக்கு நோக்கிச்  செல்லும் 'உத்தராயணம்', தைப் பொங்கல் நாளில் தொடங்குகிறது. புதிய திசையை நோக்கிச் செல்லல், மனித சமூகத்தின் உள்ளக-வெளிப்புற சகவாழ்வு என்பனவே தைப்பொங்கல் பண்டிகையின் அர்த்தமாகும்.

இந்த நாட்டு மக்களின் நற்பண்புகள்,நல்லிணக்கம் மற்றும்  சகவாழ்வு என்பவற்றை மேம்படுத்தி சமூக மாற்றத்திற்கான ஆரம்ப முயற்சியாகவும், சுற்றுச்சூழல் மற்றும் நெறிமுறைக்கான புதிய  ஒரு  திசையின்  தொடக்கமாக 'கிளீன் ஸ்ரீலங்கா' திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ள சமயத்தில், தைப் பொங்கல் பண்டிகையைக் கொண்டாடுவது மகிழ்ச்சியளிக்கிறது. வரலாற்று ரீதியாக வேரூன்றிய ஆசிய மரபுகளில் மனிதனுக்கும்  சுற்றுச்சூழலுக்கும் இடையிலான பிணைப்பு பிரிக்க முடியாதது. தைப்பொங்கல் தினத்தால் வெளிப்படுத்தப்படும் அந்த மரபுகள் இந்த திட்டத்தில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன.

அதேபோல், தைப்பொங்கல் கொண்டாட்டம் மக்களின் கலாச்சார வாழ்வில் புதிய நம்பிக்கைகளை கட்டியெழுப்புகிறது. நாட்டில் உருவாகியுள்ள புதிய  உத்வேகத்துடன், இலங்கையர்களாகிய நம் அனைவருக்கும், "அழகான வாழ்க்கை" என்ற நம்பிக்கையை நம் இதயங்களில் சுமந்து, புத்தாண்டில் புதிய உற்சாகத்துடன் முன்னோக்கிக் கொண்டு செல்லும்  வாய்ப்பு கிடைத்துள்ளது. அதற்காக சுற்றுச்சூழல்   முன்னேற்றத்திற்கு உகந்த முன்னுரிமை அளிக்கும் ஒரு புதிய கலாசார நெறிமுறை  இருப்பை உருவாக்குவதன் மூலம் நிலையான அமைதி, நல்லிணக்கம் என்பவற்றை மேம்படுத்துவதற்குத் தேவையான  கொள்கைகளை நடைமுறைப்படுத்தும் தலைமை பொறுப்பு மற்றும் பொறுப்புக்கூறலை நாங்கள் ஏற்கிறோம்.

நாட்டிற்கும்   மக்களுக்கும் பல நல்ல விடயங்களை  நிறைவேற்ற உறுதிபூண்டு, நாட்டின் பொறுப்பை ஏற்றுக்கொண்ட நாங்கள்,  அந்த வாக்குறுதிகளை தடைகளுக்கு மத்தியிலும் பின்வாங்காத துணிச்சலுடனும் அசைக்க முடியாத உறுதியுடனும்  நிறைவேற்ற உறுதிபூண்டுள்ளோம். இந்த நாட்டு மக்களின் முகங்களில் நீடித்த புன்னகையைக் கொண்டு வருவதை நோக்கமாகக் கொண்ட இந்த செயற்பாட்டில், புதிய அணுகுமுறைகளுடன், ஒற்றுமையுடனும் பங்கேற்புடனும் ஒன்றிணைய உங்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கிறேன்.

சுபமான ஆரம்பத்திற்கு இந்தப் பொங்கல் கொண்டாட்டம் பாரிய ஆசீர்வாதமாக அமைய வேண்டும் என்று நான் பிரார்த்திக்கிறேன்.

இலங்கை மற்றும் உலகளாவிய இந்து பக்தர்கள் அனைவருக்கும் நல்லிணக்கம் மற்றும் நன்றியுணர்வு நிறைந்த, வளமான மற்றும் மகிழ்ச்சியான தைப்பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்!

அநுரகுமார திசாநாயக்க

ஜனாதிபதி

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசு

2025 ஜனவரி 14ஆம் திகதி

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி