ஜப்பானின் முக்கிய நகரங்களில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஜப்பானின்

கியூஷி உள்ளிட்ட பகுதிகளில் இன்று திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது.

கியூஷி பகுதியில் இருந்து 37 கிலோமீற்றர் ஆழத்தில் நிலநடுக்கம் உருவாகி உள்ளது. இதனால், ஜப்பானின் கியூஷி உள்ளிட்ட நகரங்கள் அதிர்வுகளை உணர்ந்தன.

இதனால், அச்சமடைந்த மக்கள் சாலைகளில் தஞ்சமடைந்தனா். நிலநடுக்கம் காரணமாக கட்டிடங்களில் உள்ள கண்ணாடிகள் மற்றும் சுவர்கள் சேதமடைந்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து அந்நாட்டு பேரிடர் மேலாண்மை குழு நடத்திய ஆய்வில், ரிக்டர் அளவில் 6.6 என்ற கணக்கில் நிலநடுக்கம் ஏற்பட்டது தெரிந்தது.

உலகில் அதிகளவு இயற்கை பேரிடர்கள் ஏற்படும் நாடுகள் பட்டியலில் ஜப்பான், சீனா ஆகியவை முதலித்தில் உள்ளன. இதற்குக் காரணம் அந்நாடுகளின் புவி அமைப்பு தான் ஆகும்.

ஜப்பான், சீனா, இந்தோனேஷியா போன்ற நாடுகளின் புவி அமைப்பு நிலநடுக்கம் மற்றும் சுனாமி ஏற்பட உகந்த சூழலில் உள்ளன.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி