ஹோமாகம தியகம சர்வதேச மைதானத்திலிருந்து, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த

ராஜபக்ஷவின் பெயர் நீக்கப்படும் என, அரசாங்கம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

இது தொடர்பில், செய்தியாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில்குமார கமகே, மேற்படி மைதானத்தின் கட்டுமானத்தில் பெரும் தொகை வீணடிக்கப்பட்டுள்ளதாகவும், வளாகம் இப்போது பாழடைந்த நிலையில் இருப்பதாகவும், அமைச்சர் குற்றம் சுமத்தியுள்ளார்.

இதன்படி, மஹிந்த ராஜபக்ஷவின் பெயரில் மைதானம் காணப்பட்டால், எந்த தனியார் துறை முதலீட்டாளர்களும், இந்த விளையாட்டு வளாகத்தை நடத்துவதற்கான பணத்தை முதலீடு செய்ய மாட்டார்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்தோடு,  கட்டுமானத்தின் போது நடந்த மோசடி மற்றும் ஊழல் குறித்து சிறப்பு விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், செய்யப்பட்ட பணிகள் ராஜபக்ஷர்களுக்கு பொருத்தமாக இருந்தாலும், அது நாட்டிற்கும் சர்வதேச சமூகத்திற்கும் பொருந்தாது என்றும் சுனில்குமார கூறியுள்ளார்.

ஒரு வருடத்திற்கு முன்பு விளையாட்டு வளாகத்திற்கென கொண்டுவரப்பட்ட ஒரு கொள்கலனில், மில்லியன் கணக்கான  ரூபாய் மதிப்புள்ள ஜெனரேட்டர்கள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும், இந்த விளையாட்டு வளாகத்தில் உள்ள பொருட்களின் பட்டியல் எதிலுதே அதுபற்றி தகவல்கள் இல்லை எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி