ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் அமைச்சரும் களுத்துறை மாவட்ட
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான இந்திரதாச ஹெட்டியாரச்சி இன்று காலை காலமானார்.
இறக்கும் போது அவருக்கு வயது 99 ஆகும். நாட்டின் மூத்த அரசியல்வாதிகளில் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர், களுத்துறை மாவட்ட அமைச்சர், தென்னை மற்றும் பயிர் பல்வகைப்படுத்தல் அமைச்சர் பதவிகளை வகித்துள்ளார்.
1948ஆம் ஆண்டு நடைபெற்ற கும்புக்கபன்துவ கிராம நிர்வாக சபைத் தேர்தலில் ஹெனேகம பிரிவின் கிராம நிர்வாக உறுப்பினராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதன் மூலம் தனது அரசியல் பயணத்தைத் தொடங்கினார்.
அந்தக் காலகட்டத்தில், அவர் ஒரு பாராளுமன்ற உறுப்பினராகவும் அமைச்சராகவும் ஹொரணைத் தொகுதியின் வளர்ச்சிக்கு வலுவான பங்களிப்பைச் செய்தார்.
அவர், பொக்குனுவிட்ட ஜனசெத அறக்கட்டளை திட்டம் உட்பட பல மேம்பாட்டுத் திட்டங்களைத் தொடங்கி வைத்துள்ளார், மேலும் ஹொரண ரோயல் கல்லூரியின் நிறுவனர் ஆவார்.
இவரின் சடலம், நாளை வரை கொழும்பில் உள்ள ஜயரத்ன மலர்சாலையில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 14ஆம் திகதி ஹேனகம, பொக்குன்விட்டவில் உள்ள அஜந்தா இல்லத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு, 15ஆம் திகதி புதன்கிழமை பிற்பகல் பொக்குன்விட்டவில் உள்ள கேந்திர மைதானத்தில் இறுதிச்சடங்குகள் நடைபெறவுள்ளன.