ஹம்பாந்தோட்டை – அங்குனுகொலபெலஸ்ஸ, 09ஆம் இலக்கம் கூட்டுறவு

பிரதேசத் தேர்தலில், திசைக்காட்டி சின்னத்திலான தேசிய மக்கள் சக்தி தோல்வியடைந்துள்ளது.

கடந்த ஜனாதிபதித் தேர்தலின் பின்னரான பாராளுமன்றத் தேர்தல் மற்றும் கூட்டுறவுத் தேர்தல் உள்ளிட்ட பல தேர்தல்களில் தொடர்ந்து வெற்றிபெற்று வந்த தேசிய மக்கள் சக்தி, இம்முறை அங்குனுகொலபெலஸ்ஸ கூட்டுறவுத் தேர்தலில் தோல்வியுற்றுள்ளமை, அக்கட்சி மீதான மக்களின் அதிருப்தி கொஞசம் கொஞ்சமான வெளிப்படுத்தப்படுவதையே காட்டுகிறது என்று, அரசியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

அதன்படி, ஒரு சுயாதீனக் குழுவே, அங்குனுகொலபெலஸ்ஸ கூட்டுறவு அதிகாரத்தை பலப்படுத்தியுள்ளது. இவ்வாறாக, சுயேட்சைக் குழு பெற்றுள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கை 9 ஆகும். அந்தச் சுயேட்சைக் குழு பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை 143 ஆகும்.

தேசிய மக்கள் சக்தி, 128 வாக்குகளைப் பெற்றது. சம்பந்தப்பட்ட தேர்தலில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை 284 என்றும் அங்கிகரிக்கப்படாத வாக்குகளின் எண்ணிக்கை 13 என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தத் தேர்தல் நேற்று முன்தினம் (10) நடைபெற்றது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி