முன்னாள் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தொடர்பில்

கிடைத்த தகவல்களின் அடிப்படையில், குற்றப் புலனாய்வுத் துறையின் அதிகாரிகள் குழு ஒன்று நேற்று (10) பிற்பகல் ஐக்கிய தேசியக் கட்சி தலைமையகமான சிறிகொத்தவுக்கு சென்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.

வெளிநாட்டில் இருப்பதாகக் கூறப்பட்ட முன்னாள் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார, நேற்று காலை ஐக்கிய தேசியக் கட்சி தலைமையகத்திற்கு சென்றார்.

தன் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த மனுஷ நாணயக்கார, தான் கைது செய்யப்படுவது குறித்து தனக்கு பயம் இல்லை என்றும் கூறினார்.

தனது சகோதரர், தனது பெயரை விற்று மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக ஒப்புக்கொண்ட அவர், தனது பெயரைப் பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்ட வேறு சில நபர்களும் இருப்பதாகக் கூறினார்.

மனுஷ நாணயக்காரவும் தான் ஆபத்து என்று தெரிந்தே பல்வேறு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டதாக ஒப்புக்கொண்டார்.

அதற்காக தனது அமைச்சு அதிகாரங்களைப் பயன்படுத்தியதாகவும் அவர் மேலும் கூறினார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி