மதுபானங்கள் மீதான கலால் வரிகளை திருத்தி நிதி அமைச்சகம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
அதன்படி, பல வகையான மதுபானங்களுக்கு பல பிரிவுகளின் கீழ் கலால் வரி திருத்தம் செய்யப்படும். மேலும், மதுபானங்களின் விலையில் தோராயமாக 6 சதவீதம் அதிகரிப்பு இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, இன்று முதல் மதுபானங்களின் விலைகள் அதிகமாகக் காணப்படும்.
இதேவேளை, 4 பிரிவுகளின் கீழ் ஒரு சிகரெட்டின் விலை 5 மற்றும் 10 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
இதன்படி, CAPSTAN மற்றும் John Player சிகரெட்டுகளின் விலை ரூ. 5ஆல் அதிகரிக்கப்பட்டுள்ளது, dunhill மற்றும் Gold Leaf சிகரெட்டுகளின் விலை ரூ.10ஆல் அதிகரிக்கப்பட்டுள்ளது.