யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில்

படுகொலை செய்யப்பட்டவர்களின் 51ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு, இன்று காலை அனுஷ்டிக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் - முற்றவெளியில் அமைந்துள்ள உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலை நினைவாலயத்தில்  இலங்கை தமிழரசு கட்சியின் ஏற்பாட்டில் அதன் பதில் தலைவர் சீ.வி.கே. சிவஞானம் தலைமையில் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது.

இதன்பொழுது உயிரிழந்த ஒன்பது  உறவுகளின் நினைவாக அமைக்கப்பட்ட நினைவுத் தூபியில் பொதுச்சுடர்  ஏற்றப்பட்டு மலரஞ்சலியும் செலுத்தப்பட்டது.

நினைவேந்தல் நிகழ்வில்  வடமாகாண அவைத்தலைவரும்  இலங்கை தமிழரசு கட்சியின்  பதில் தலைவருமான சி.வி.கே சிவஞானம், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சொலமன் சிறில், வடக்கு மாகாண சபையின் முன்னாள் அமைச்சர் சர்வேஸ்வரன்,

வடக்கு மாகாண சபை முன்னாள உறுப்பினரான சுகிர்தன், யாழ்ப்பாணம் மாநகர சபையின் முன்னாள் முதல்வர் ஆர்னோல்ட், இலங்கை தமிழரசு கட்சியின் நிர்வாக செயலாளர் குலநாயகம், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்கள்,ச மூக செயற்பாட்டாளர்கள் பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இதேவேளை உலகத் தமிழராய்ச்சி மாநாட்டு படுகொலையின்  51வது ஆண்டு நினைவேந்தல் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே .சிவாஜிலிங்கத்தின் அழைப்பின் பெயரில் உலகத் தமிழராய்சசி மாநாட்டு படுகொலை நினைவு தூபியில் இன்று காலை 10.30 மணியளவில் இடம்பெற்றது.

இதன் பொழுது  பொதுச்சுடரினை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் ஏற்றி வைத்தார்.

தொடர்ந்து உலகத்தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் ஏற்பாட்டில் மரக்கன்றுகளும் நாட்டி வைக்கப்பட்டது.

இதன் பொழுது பாராளுமன்ற முன்னாள் உறுப்பினரும் புளொட் அமைப்பின் தலைவருமான தர்மலிங்கம் சித்தார்த்தன், வடமாகாண சபை முன்னாள் உறுப்பினர் பா.கஜதீபன்,

உலகத்தமிழர் பண்பாட்டு இயக்கத்தின் செயலாளர் கருணாகர, நாவலன் சமூக விஞ்ஞான ஆய்வு மையத்தின் இயக்குனர் ஜோதிலிங்கம்  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி